Thursday, May 20, 2010

ஜாலியா Jolls விளையாடுங்க

Jolls என்ற இந்த விளையாட்டு உங்கள் கைகளில்
பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களை உடைய பந்துகள்
இருக்கின்றன.



அவற்றை அதே நிறங்களை உடைய பிம்பங்களுடன்
சேர்க்க வேண்டும்.

திரையில் தோன்றும் symbols கள் மீது பந்து படும்
போது ஒரு குறிப்பிட்ட power ஆனது பந்துகளுக்கு
கிடைக்கும்.

உதரனமாக + symbol மீது படும் போது பந்தானது
பெரிதாகும். - symbol மீது படும் போது பந்தானது
சிறிதாகும். <> symbol மீது படும் போது பந்தானது
பறந்து செல்லும்.

இவற்றில் gray color பந்தானது மற்ற பந்துகளுக்கு
உதவி செய்யும் வகையில் இருக்கும். இதற்கு பிம்பங்கள்
கிடையாத்து.

லின்க் : http://www.6to60.com/games/9661-Jolls.html

Wednesday, May 19, 2010

விளையாட்டு: Toon Marooned

Toon Marooned என்ற இந்த விளையாட்டு தண்ணீரில்
அங்கும் இங்குமாக மிதக்கும் தீபங்களை உடைத்து
தண்ணீரில் மூல்கடிப்பதே ஆகும்.



தீபங்களில் உங்களுக்கு ஒதுக்கபட்டது பச்சை நிற
தீபங்கள் ஆகும்.எதிராளி சிவப்பு நிற தீபங்களை
உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதற்கு முன்பாகவே
நாம் பச்சை நிற தீபங்களை உடைத்து தண்ணீரில்
மூல்கடிக்க செய்ய வேண்டும்.

பீரங்கியின் திசையை மாற்ற கீழே TURN க்கு அருகில்
உள்ள arrow களின் மீது click செய்ய வேண்டும்.

மேலும் எவ்வளவு தூரம் சென்று தாக்க வேண்டும்
என்பதை powerஐ mouse யின் இடது click செய்து
கொண்டு drag செய்வதன் மூலம் தேர்வு செய்யலாம்.

அவ்வாறு தேர்வு செய்த பின்பு Launch என்ற
பொத்தாணை அழுத்த வேண்டும்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/138-Toon%20Marooned.html


Thursday, May 6, 2010

விளையாட்டு: Home Sheep Home

நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம்
உடையவர்கள் என்றால் இந்த ஆடுகளுக்கும் உதவுங்களேன்.



Home Sheep Home என்ற இந்த விளையாட்டு மூன்று
ஆடுகள் திசை மாறி சென்றுவிட்டது அவைகளை
தனது இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதற்கு arrow keys பயன்படுத்த வேண்டும்.இது மிகவும்
எளிது என்று நினைத்துவிட வேண்டாம். செல்லும்
பாதையில் சில தடைகளை தாண்டி செல்ல வேண்டும்.

முதல் level ல் ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.
இவற்றில் மொத்தம் 15 level கள் உள்ளன.


லின்க் : http://www.6to60.com/games/9689-Home%20Sheep%20Home.html

Wednesday, May 5, 2010

மன இறுக்கம் உடைக்க பலுன் உடையுங்கள்

உலகத்திலேயே மிகவும் களைப்பாக்கிற விஷயம்
என்னவென்றால் அது நாம் எதுவுமே செய்யாமல்
இருப்பதுதான். அந்தமாதிரியான நேரங்களில் மன
இறுக்கம் ஏற்படும்.


அந்த நேரங்களில் நமது கவனத்தை மற்றொறு விஷயத்தில்
திசை திருப்ப வேண்டும்.அந்த விஷயம் மிகவும்
சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும்.




அப்படிபட்ட ஒரு சுவாரஸ்யமான இணைய
விளையாட்டுதான் Bloons.

இதை விளையாட மவுஸே போதுமானது.ஒரு குரங்கு
தன்னிடம் உள்ள அம்புகளின் மூலம் பலுன்களை
உடைக்க வேண்டும். இது மிகவும் எளிது என்று
நினைத்துவிட வேண்டாம்.

குரங்கிடம் குறிப்பிட்ட அம்புகள்தான் இருக்கும்
அவற்றை கெண்டு ஒரு குறிப்பிட்ட பலுன்களை
உடைக்க வேண்டும். பலுன்களை உடைக்க மவுஸால்
திசையை தேர்வு செய்து Click செய்ய வேண்டும்.
முதல் ஓரிறு level கள் எளிதாக இருந்தாலும் மற்ற level கள்
சற்று கடினமாக இருக்கும்.இவற்றில் மொத்தம் 50 level கள் உள்ளன.

Monday, April 26, 2010

நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் மனம் உடையவரா?

நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் மனம் உடையவர்கள்
என்றால் இவர்களுக்கும் உதவி செய்யுங்களேன்.

Ice Breaker என்ற இந்த விளையாட்டு கடுமையான பனி
பொழிவில் மாட்டி கொண்டு உறைந்து இருப்பவர்களை
காப்பாற்றுவதே ஆகும்.



இந்த game யை எப்படி விளையாடுவது என்பதைபார்ப்போம்.
mouse யின் இடது click செய்து கொண்டே drag செய்வதன்
மூலம் ice bar களை cut செய்ய முடியும். இவ்வாறு
ice bar களை cut செய்து ice bar களில் சிக்கியுள்ளவர்களை
படகிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவற்றில் ice bar களை குறிப்பிட்ட முறை மட்டும்தான்
cut செய்ய முடியும். எத்தனை முறை ice bar களை
cut செய்ய முடியும் என்பதையும் மற்றும் எத்தனை
முறை cut செய்து உள்ளோம் கீழே இடது ஓரத்தில்
காண்பிக்கும். கீழே வழது ஓரத்தில் எத்தனை நபர்களை
காப்பாற்ற வேண்டும் என்பதையும் காண்பிக்கும்.அந்த
நபர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை வரைபடத்தின்
மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதல் ஓரிறு level கள் எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
லின்க் : http://www.6to60.com/games/9678-Ice%20Breaker.html

Thursday, February 18, 2010

உங்களின் யோசிக்கும் திறனுக்கு ஒரு சிறிய பயிற்சி

உங்களின் யோசிக்கும் திறனை அறிய உதவும் ஒரு
சிறிய பயிற்சி விளையாட்டு தான் இந்த Master Checkers
என்ற game.



படத்தில் உள்ளது போல் 12 red coins களும்,12 blue coins
களும் உள்ளது.இவற்றில் உங்களுக்கு ஒதுக்கபட்டது
red coins கள் ஆகும்.

இங்கே coins களை குறுக்கு வசமாக, ஒரு முறை
மற்றும் ஒரு கட்டம் தான் முன்னே நகற்ற முடியும்
மேலும் எந்த ஒரு coin ஆனது எதிராளியின் கடைசி
எல்லையை (8 th row) அடைகின்றதோ அப்பொழுது
அந்த coin ஆனது ஒறு கிரீடம் தன் மேல் உள்ளது
போன்று மாறும் அந்த coin களால் மட்டும் தான்
பின்னோக்கி நகர முடியும் மற்ற coin களால்
பின்னோக்கி நகர முடியாது.

இங்கே எதிராளியை வீழ்த்த வேண்டும் என்றால்
தனக்கு அருகில் உள்ள எதிராளியை தாண்டி சென்று
தான் வீழ்த்த வேண்டும்.அப்பொழுது மீண்டும் ஒரு
எதிராளியை வீழ்த்த வாய்ப்பு இருக்கும் பட்சத்தில்
அப்பொழுது மீண்டும் தாண்டி சென்று வீழ்த்த
முடியும்.

இதற்கு mouse யை கொண்டு எந்த coin என்பதை click
செய்து தேர்வு செய்ய வேண்டும்.பிறகு எங்கு move
செய்ய வேண்டுமோ அந்த கட்டத்தின் மீது click செய்ய
வேண்டும்.

இவ்வாறு move செய்து எல்லா எதிராளிகளையையும்
வீழ்த்தவேண்டும்.நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/7895-Master%20Checkers.html

Wednesday, February 17, 2010

வாண்டுகளின் சேட்டை,குறும்புத்தனம்

பொதுவாக வாண்டுகள் என்றாலே பல சேட்டைகள்
மற்றும் குறும்புத்தனங்களை செய்பவர்கள்.அதிலும்
சில வாண்டுகள் தனக்கு கோபம் வந்துவிட்டால்
போதும் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து
தரையில் வீசுவது அல்லது கால்களினால் உதைத்து
தள்ளி விடுவது.

பிறகு அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ திட்டு,
அடி வாங்குவதுதான் மிச்சம்.

ஆனால் இந்த game (Rotten) பொறுத்த வரையில்
பொருட்களை உடைத்தால் உங்களுக்கு கிடைப்பது
திட்டோ,அடியோ இல்லங்கோ அதற்கு பதிலாக
கிடைப்பது மதிப்பெண்கள் தான்.

இந்த game யை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.


இந்த game யை விளையாடுவதற்க்கு space bar key ஒன்றே
போதும்.



முதலில் எந்த angle என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு எந்த வேகத்தில்(power) உதைக்க போகின்றீர்கள்
என்பதை தேர்வு செய்ய வேண்டும்.இவை இரண்டிற்கும்
space bar key யை பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் சிறு வயதில் பொருட்களை உடைக்க
முடியவில்லை என்றால் இங்கே முயற்சி செய்து
பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/9483-Rotten.html