Thursday, February 18, 2010

உங்களின் யோசிக்கும் திறனுக்கு ஒரு சிறிய பயிற்சி

உங்களின் யோசிக்கும் திறனை அறிய உதவும் ஒரு
சிறிய பயிற்சி விளையாட்டு தான் இந்த Master Checkers
என்ற game.



படத்தில் உள்ளது போல் 12 red coins களும்,12 blue coins
களும் உள்ளது.இவற்றில் உங்களுக்கு ஒதுக்கபட்டது
red coins கள் ஆகும்.

இங்கே coins களை குறுக்கு வசமாக, ஒரு முறை
மற்றும் ஒரு கட்டம் தான் முன்னே நகற்ற முடியும்
மேலும் எந்த ஒரு coin ஆனது எதிராளியின் கடைசி
எல்லையை (8 th row) அடைகின்றதோ அப்பொழுது
அந்த coin ஆனது ஒறு கிரீடம் தன் மேல் உள்ளது
போன்று மாறும் அந்த coin களால் மட்டும் தான்
பின்னோக்கி நகர முடியும் மற்ற coin களால்
பின்னோக்கி நகர முடியாது.

இங்கே எதிராளியை வீழ்த்த வேண்டும் என்றால்
தனக்கு அருகில் உள்ள எதிராளியை தாண்டி சென்று
தான் வீழ்த்த வேண்டும்.அப்பொழுது மீண்டும் ஒரு
எதிராளியை வீழ்த்த வாய்ப்பு இருக்கும் பட்சத்தில்
அப்பொழுது மீண்டும் தாண்டி சென்று வீழ்த்த
முடியும்.

இதற்கு mouse யை கொண்டு எந்த coin என்பதை click
செய்து தேர்வு செய்ய வேண்டும்.பிறகு எங்கு move
செய்ய வேண்டுமோ அந்த கட்டத்தின் மீது click செய்ய
வேண்டும்.

இவ்வாறு move செய்து எல்லா எதிராளிகளையையும்
வீழ்த்தவேண்டும்.நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/7895-Master%20Checkers.html

Wednesday, February 17, 2010

வாண்டுகளின் சேட்டை,குறும்புத்தனம்

பொதுவாக வாண்டுகள் என்றாலே பல சேட்டைகள்
மற்றும் குறும்புத்தனங்களை செய்பவர்கள்.அதிலும்
சில வாண்டுகள் தனக்கு கோபம் வந்துவிட்டால்
போதும் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து
தரையில் வீசுவது அல்லது கால்களினால் உதைத்து
தள்ளி விடுவது.

பிறகு அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ திட்டு,
அடி வாங்குவதுதான் மிச்சம்.

ஆனால் இந்த game (Rotten) பொறுத்த வரையில்
பொருட்களை உடைத்தால் உங்களுக்கு கிடைப்பது
திட்டோ,அடியோ இல்லங்கோ அதற்கு பதிலாக
கிடைப்பது மதிப்பெண்கள் தான்.

இந்த game யை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.


இந்த game யை விளையாடுவதற்க்கு space bar key ஒன்றே
போதும்.



முதலில் எந்த angle என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு எந்த வேகத்தில்(power) உதைக்க போகின்றீர்கள்
என்பதை தேர்வு செய்ய வேண்டும்.இவை இரண்டிற்கும்
space bar key யை பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் சிறு வயதில் பொருட்களை உடைக்க
முடியவில்லை என்றால் இங்கே முயற்சி செய்து
பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/9483-Rotten.html

Tuesday, February 16, 2010

நீங்கள் எடுக்கும் முடிவு சரியா?

நீங்கள் எடுக்கும் முடிவு சரிதானா என அறிய உதவும் ஒரு பயிற்சி விளையாட்டு தான் இந்த Hexxagon என்ற game.



எப்படி விளையாடுவது?
மேலே உள்ள படத்தில் மூன்று வைரமும், மூன்று
முத்துகளும் உள்ளது நீங்கள் ஏதாவது ஒரு வைரத்தின்
மீது click செய்ய வேண்டும்.



இப்பொழுது படத்தில் உள்ளது போல அந்த வைரத்தை
எங்கே எல்லாம் move செய்யலாம் என்று மஞ்சள் மற்றும்
பச்சை நிறங்களில் காண்பிக்கும்.பச்சை நிறத்தை தேர்வு
செய்தால் புதிதாக ஒரு வைரம் தோன்றும்.மஞ்சள்
நிறத்தை தேர்வு செய்தால் அந்த இடத்திற்கு move ஆகும்.

அப்படி move ஆகும் போது அதற்கு அருகில் உள்ள
முத்துகளானது வைரங்களாக மாறும்.அதே போல்
முத்துகள் move ஆகும் போது வைரங்களானது
முத்துகளாக மாறும் ஆகையால் மிகவும் கவனமாக
move செய்ய வேண்டும்.



இவ்வாறு உங்களது வைரங்களை அதிகரிக்க செய்ய
வேண்டும். அதிக எண்ணிக்கையில் எது உள்ளதோ
அவர்களே வெற்றி பெற்றவர்.

லின்க் : http://www.6to60.com/games/9358-Hexxagon.html

Monday, February 15, 2010

உங்கள் கவன கூர்மைக்கு ஒரு சிறிய பயிற்சி

உங்களின் கவன கூர்மையை அறிய உதவும் ஒரு சிறிய பயிற்சி விளையாட்டு தான் இந்த Memory 2 என்ற game.



படத்தில் உள்ளது போல் பல நிறங்களில் பல்புகள் காணப்படும்.
முதலில் ஒரு பல்பானது ஒளிரும் பிறகு Your Turn என்று திரையில் தோன்றும் போது நாம் சரியான பல்பு மீது mouse யின் உதவியால் left click செய்ய வேண்டும்.

இப்பொழுது ஏதாவது இரண்டு பல்பானது ஒளிரும்
நாமும் அதே வரிசையில் அதே பல்புகளை click செய்ய
வேண்டும். இவ்வாறு மூன்று,நான்கு,ஐந்து......என அதிகரித்து கொண்டே செல்லும்.

இவ்வாறு விளையாடுவது எளிதுதான். ஆனால் மிகவும் கவனமாக விளையாட வேண்டும் தவறுதலாக வேறு நிற பல்பை click செய்தால் game
ஆனது முடிவுக்கு வரும்.நீங்களும் உங்களின் கவன கூர்மையை தெரிந்து
கொள்ளுங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/8885-Memory%202.html